பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை!!
இளைஞர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அம்பாறை விசேட போக்குவரத்து நடவடிக்கை காரணமாக வீதி ஒழுங்கு முறைகளை மீறிய சாரதிகள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்தியத்தில் காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சாய்ந்தமருது புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி, இதாளவட்டுவான் சந்தி பாண்டிருப்பு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது என்பன கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க வழிகாட்டலில் இடம்பெற்றது.
அத்துடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கல்முனை சவளைக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்
மேலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரும் தற்காலிக தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo