ஜோசப் பரராஜசிங்கம் கொலைவழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது


2005 ஆம் ஆண்டு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் பாலன்பிறப்பு இரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
 இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா, கிருஷ்ணனந்தராஜா, ரங்கசாமி கனகநாயகம், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்
மீரா லெப்பை கலீல், முன்னாள் ராணுவ சிப்பாய்  மதுசிங்க (வினோத் )ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று 25 மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
Blogger இயக்குவது.