முருங்கைக்காய் விதைகளை அடிக்கடி சாப்பிடுங்கள்: என்னாகும் தெரியுமா?

முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, B1, B2, B3, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.


ஆனால் அதைவிட முருங்கைக்காயின் விதைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. அதுவும் இந்த முருங்கை விதைகள் பல நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது.

முருங்கை விதைகளின் நன்மைகள்

முருங்கை விதையில் உள்ள கால்சியம் சத்து, மூட்டுகள் மற்றும் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

முருங்கை விதைகளில் 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் உள்ளது. அவை அனைத்தும் நம் உடம்பில் உள்ள செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை முருங்கை விதைக்கு உள்ளது, அதோடு சர்க்கரை நோய் வராமலும் தடுக்கிறது.

நம் உடம்பில் செல் சிதைவுகள் ஏற்படாமல் தடுத்து, புதிய செல்களை உருவாக்கத்தை அதிகரிக்க முருங்கை விதைகள் உதவுகிறது.

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அடிக்கடி முருங்கை விதைகளை உணவில் எடுத்துக் கொண்டால் தூக்கமின்மை பிரச்னை வராது.

முருங்கை விதைகள் இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

புற்றுநோய் வராமல் தடுப்பதில் முருங்கை விதைகள் உதவுகிறது. அதனால் புற்றுநோய் உள்ளவர்கள் முருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
Blogger இயக்குவது.