கிளிநொச்சி ஜெர்மன் ரெக் மாணவர்களின் வடிவமைப்பு

மின் துண்டிப்பு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய power bank கிளிநொச்சி ஜெர்மன் ரெக் மாணவர்களால் வடிவமைப்பு.


இன்றுவரை அலுவலகங்களிலும் வீடுகளிலும் அவசர வேளைகளில் மின் துண்டிக்கப்பட்டால் டீசல் ஜெனரேற்றர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்க்கான பிரதியீட்டு பொருளாக மேற்படி POWER BANK வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப் POWER BANK ஆனது சூரிய சக்தியினாலேயே மின்னேற்றம் செய்யப்படுகிறது. எனவே இப் பவர் bank ஆனது நாளாந்த செலவுகள் எதுவும் அற்றது. அத்துடன் டீசல் ஜெனரேற்றர்கள் பயன்படுத்தும் போது அவை பேரிரச்சலை தருகிறது. எனினும் இப் power bank ஆனது எந்தவிதமான சத்தங்களையும் தராத இலகுவாக தூக்கி செல்லக்கூடிய கையடக்கமான உபகரணமாகும். இதற்கு பிரதான மின்வழங்கலின் எந்தவித இணைப்பும் தேவையற்றது.
அத்துடன் இதிலிருந்து 4 மின் குமிழ்கள் 2 சீலிங் மின்விசிறிகள் என்பவற்றை ஒரே நேரத்தில் இயக்க முடியுமெனவும் குறிப்பிடப்படுகிறது.
Blogger இயக்குவது.