பகிடிவதையா? வன்முறையா? | ஜெரா!!
தமிழ் பேச்சுவழக்கில் “பகிடி” என்றொரு சொல் பாவனையில் உண்டு. ஏதாவது ஒரு விடயத்தை எள்ளலாக, நகைச்சுவையாக, விகடமாக கேட்போர் சிரிக்கும் வண்ணம் பேசுவதை பகிடி என்கிறோம்.
அதேபோல ”வதை” என்ற ஒரு சொல்லும் தமிழில் பாவனையில் உண்டு. தமிழகத் தமிழர்களுக்குப் பசுவதை பரீட்சயமான சொல். ஈழத்தமிழருக்கு சித்திரவதை, வதைமுகாம், பாலியல்வதை, வதைக்கூடம் போன்ற சொற்கள் நன்கு பரீட்சயமானவை. வதை என்ற சொல்லை வாசிக்கும்போதே, நமக்குள் பயங்கரம், குரூரம், மிலேச்சத்தனம் ஏற்படும். அந்தவகையில் வதை என்பது மிகப் பயங்கரமானது.
இவ்வாறு பகிடி மனித உணர்வில் சந்தோசத்தையும், வதை மனித உணர்வில் பயங்கரத்தையும் தருகிறது. இரண்டும் சேர்ந்து (பகிடி வதை) ஒரு சொல் உருவாக்கப்படுவது எவ்வளவு முரணானது? ஒரு பசுவைப் பிடித்துப் பகிடிக்கு வதைக்கிறோம் என்று சொல்ல முடியுமா? அல்லது ஓர் அப்பாவி ஈழத் தமிழ் இளைஞனைப் பிடித்து அரச படைகள் சிறையிலடைத்து சித்திரவதை செய்வதை பகிடிக்கு வதைக்கிறார்கள் எனச் சொல்லமுடியுமா? எனவே ‘’Ragging’’ (ராகிங்) என்பதற்குப் பகிடிவதை என்ற சொல் பொருத்தமானதல்ல. அது மிகப்பெரும் மனித உரிமை மீறலை, சக மனிதன் மீது மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான வன்முறையை பரிகாசத்துக்குரியதாக உணரவைக்கிறது. வதை என்ற சொல்லை படிக்கும்போது ஏற்படும் பயங்கர உணர்வை மலிவுபடுத்துகின்றது. இச்சொல்லில் முதல்மாற்றம் இடம்பெறவேண்டியுள்ளது. பல்கலை வன்முறை என்றோ, பல்கலை மிலேச்சத்தனம் என்றோ, ஆங்கிலத்தில் உள்ளதுபோலவோ அழைத்துக்கொள்வதுதான், இந்த வகை கற்றோர் ஈடுபடும் வன்முறைகளின் வீரியத்தை முழுமையாக வெளிப்படுத்த உதவும்.
ராகிங் என்றால் என்ன?
பல்கலைக்கழகம், கற்றல் வளாகங்கள், கல்வியியல கல்லூரிகள் தனியார் கல்லூரிகள், போன்றவற்றில் புகுமுக மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்களால் ஏற்படுத்தப்படும் வன்முறைகளைத்தான் ’’Ragging’’ என்கின்றனர். அதாவது பல்கலைக்கழக வாழ்வின் ”ஆரம்ப சடங்கு” என்கின்றனர். தமிழ் நாம் ‘ragging period’ என்றுகூட அந்தக் காலத்தை அழைப்போம். கடந்த சில வருடங்களாக பாடசாலையில் உயர்தரமாணவர்களிடம் கூட இந்த ”ஆரம்ப சடங்கு” பரவியிருக்கிறது.
தகாத வார்த்தைகளால் பேசுதல், பெண்களைத் தகாத வார்த்தைகளால் வர்ணிக்கச் செய்தல், தேவாரம், திருக்குறள் போன்றவற்றைத் கெட்டவார்த்தைகளில் இயற்றிப் பாடவைத்தல் என வாய்மூல வன்முறைகளும், அடித்தல், நுள்ளுதல், நகங்களால் கீறுதல், மலக்குழியில் Tips அடிக்க வைத்தல், நூற்றுக்கணக்கான தோப்புக்கரணங்களைப் போடவைத்தல், ஆளாளுக்கு மாறிமாறி கன்னங்களில் அடிக்கவிடுதல், கூட்டுத்தோப்புக்கரணம் போட வைத்தல், பணம் பறித்தல், குடிபானங்கள் வாங்கித்தரப் பணித்தல், சிரேஷ்ட மாணவர்களின் உடைகளைத் தோய்க்கப்பணித்தல் எனப் பலவகையில் உடல்ரீதியான வன்முறைகளும், பாலியல் உறுப்புக்களை பொதுவெளியில் காட்டப் பணித்தல் (புகுமுக ஆண்மாணவர்களை நோக்கி சிரேஷ்ட மாணவர்கள் ”யுனிவர்சிற்றி ஐசியைக் காட்டு” என்றால், உடனடியாகவே நீளக்காற்சட்டையின் ஷிப்பைத் திறந்து ஆணுறுப்பைக் காட்டவேண்டும் போன்ற வியத்தகு செயல்கள் நடைமுறையில் உள்ளன), பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கங்களை மிரட்டிப் பெற்று பாலியல் சார்ந்த உரையாடல்களில் ஈடுபடல், பாலியல் ரீதியான சீண்டல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் பாலியல்ரீதியான வன்முறைகளும் புகுமுக மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்களால் ஏற்படுத்தப்படுகின்றன.
இவ்வாறான கல்விக்கூட வன்முறைகள் இன்று உலகளவில் வழக்கொழிந்துவிட்டாலும், (இல்லாமலில்லை) இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற தென்னாசிய நாடுகளில் அதிகளவில் இடம்பெறுகின்றது. தென்னாசிய நாடுகளின் கல்விப் பண்பாடு திண்ணை கல்வி முறை, குருகுலக் கல்வி முறையைக் கொண்டது. மிகவும் கட்டுக்கோப்பான குருவானவர்களினால் கற்பிக்கப்படும் கல்வியானது வாழ்வொழுக்கத்திற்கானதாகவே இருந்திருக்கிறது. இயல், இசை, நாடகம் என்பன போதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நாடுகளில் பரவிய காலனிய ஆதிக்கத்தின் மூலமாகவே கட்டமைக்கப்பட்ட கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு கட்டமைக்கப்பட்ட கல்விக்கூடங்களின் வாயிலாகவே கல்விக்கூட வன்முறைகள் ஓர் ஆரம்ப சடங்காக அறிமுகமாக வாய்ப்பிருக்கின்றது. 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் உள்ள கல்விக்கூடங்களில் இவ்வகை வன்முறைகள் தலைவிரித்தாடின. எனவே அங்கிருந்து தொற்றிக்கொண்ட மனப்பிறழ்வு நோய்களுல் ராகிங்கும் உள்ளடக்கம்.
கல்விக்கூட வன்முறைகளில் ஈடுபடும் சிரேஷ்ட மாணவர்கள், புகுமுக மாணவர்களிடம் மரியாதையையே எதிர்பார்க்கின்றனர். மிரட்டல், பயமுறுத்தல் வாயிலாக அந்த மரியாதைக் கிடைக்குமென நம்புகின்றனர். தனக்குக் கீழிருப்பவரை அடக்குமுறைக்குள்ளாக்கி மரியாதையை வலிந்து உருவாக்கிக்கொள்ளும் மனநிலைதான் இது. இந்த மனநிலையை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு, “இந்த முறை நீ (புகுமுக மாணவர்) ராக்கிங் வாங்கினால்தான் அடுத்தமுறை கொடுக்கமுடியும்”, “ராக்கிங்கில் ஈடுபடாவிட்டால் பொன்ஸ்“ (பெண்தன்மையுடைய ஆண்), “ராகிங் கொடுக்காவிட்டால் தமக்கு அடுத்துவரும் மாணவர்கள் மதிக்கமாட்டார்கள்“, “ராகிங் ஊடாக நல்லுறவும், நட்பும், ஒற்றுமையும் வளர்கிறது“, “சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் ஏற்படுகிறது“, “Batch ஒற்றுமை ஏற்படுகிறது”, எனப் பல்வேறு வசனங்களில் பல்கலை இதிகாசமாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. இந்த வசனங்களின் பின்னணியில்தான் குறித்த வன்முறைகள் நியாயப்படுத்தவும்படுகின்றன. மிகவும் தந்திரமிக்க இந்த வசனங்கள் முதலாம் வருடத்தில் புகும் மாணவர்களுக்கு, அனைத்துவிதமான வன்முறைகளுக்கும் உளரீதியான தயார்படுத்தலை வழங்கிவிடுகின்றன. ”கெம்பஸ் போனால் எல்லாத்தையும் அனுபவிக்கலாம்” என உருவேற்றிக் கற்பித்து பல்கலைக்கழகத்துக்கு வழியனுப்பிவைத்த ரியூசன் வாத்திமாரின் போதனைகளுக்கும், மேற்கண்ட ராகிங் வசனங்களுக்கும் இருக்கும் பிரிக்கமுடியாத உறவை வலுப்படுத்திக்கொள்ளும் மனநிலைக்கு மாணவர்கள் தயாராகின்றனர். “இந்த முறை நான் ராகிங் வாங்கினால்தான், அடுத்தமுறை நான் கொடுக்கமுடியும்” என்ற மனநிலையை தமக்குள் தனியாகவும், நண்பர்கள் இணைந்து கூட்டாகவும் வளர்த்துக்கொள்கின்றனர். எனவேதான் ராகிங் என்கிற வன்முறையை ஒரு சில மாணவர்கள் எதிர்த்தாலும், அனேகர் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். பல்கலைக்கழக கற்றலில் அதுவொரு ஒழுக்கம் என்கின்றனர். இந்த ஒழுக்கம் ஏன்? எதற்கு என்று கேள்விக்குட்படுத்தப்படாமலேயே தொடரப்படவேண்டுமென்கின்றனர். பல்கலைக்கழகத்தில் தம் பிள்ளைக்கு ஏற்பட்ட வன்முறை பாதிப்பு பெற்றாருக்குத் தெரிந்தாலோ, ராகிங்கில் இறந்தாலோ மாத்திரம்தான் அது சலசலப்பைத்தரும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. மற்றும்படிக்கு இலங்கையில் இருக்கிற அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ராகிங் என்பது, புகுமுக மாணவர்கள் ”சமாளித்துப்போகவேண்டிய விடயம்” தான், இலங்கையின் தெருக்களில் நடத்தப்படும் “செக்கிங்” போல.
அரசினால் கட்டுப்படுத்த முடியுமா?
முடியாது. கோட்டபாய ராஜபக்ச போல இலங்கை சனநாயக சோஷலிச குடியரசை ஆட்சி செய்த ஜனாதிபதிகளில் அனேகர் ராகிங்கை நிறுத்த தீர்மானங்களைக் கொண்டுவந்தனர். ஆனால் அதனை மேற்கொண்டு நடைமுறைப்படுத்த முடியவில்லை. 2020 ஆண்டில் புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ராகிங் தொடர்பில் இறுக்கமான தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.(http://www.colombopage.com/archive_20A/Jan11_1578765454CH.php). அத்தீர்மானத்திற்குப் பின்னர்தான் பல்கலைக்கழகங்களுக்குள் ராகிங் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்பதை அண்மைய செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன. அரசினால் – அரசியல்வாதிகளால் பல்கலைக்கழக மாணவர்களைப் பகைத்துக்கொள்ளமுடியாதிருப்பதுதான், ராகிங்கை கட்டுப்பட்டுத்தமுடியாமைக்கான பிரதான காரணம். ”மாணவர் சக்தி மகத்தான சக்தி” என்கிற வெகுஜனப் போராட்டக் கோட்பாட்டுக்கு அஞ்சாத அரசியல்வாதி யாராகத்தான் இருப்பார்?
எப்படித்தான் கட்டுப்படுத்துவது?
எந்தக் கல்விமுறை ராகிங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறதோ அதைக் கொண்டுதான் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும். மாணவர் ஒருவர் பெறும் ஆரம்பக் கல்வியிலிருந்தே, மனித நேயத்தையும், சக மனிதரை மரியாதை செய்வதையும் ஒரு பாடமாகப் போதிக்க வேண்டும். வன்முறைகளுக்கு எதிரான மனநிலையை உருவாக்கக்கூடிய கல்விமுறையை அறிமுகம் செய்யவேண்டியிருக்கிறது. வேதனையென்னவெனில் அது இலங்கையில் சாத்தியமேயில்லை என்பதுதான். இலங்கை என்பது சிங்கள இனத்திற்கு மட்டுமே உரியது, இத்தீவில் அவ்வினத்திற்கு மட்டுமே உரித்துள்ளது, ஏனையவர்கள் அனைவரும் வந்தேறிகள், எதிரிகள் எனப் போதிக்கும் வரலாறு பாடப்புத்தகங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. இதுபோதாதென்று சிங்களவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் இயல்புவாழ்க்கை கூட ஓரின மையம்கொண்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. தேசியக் கொடியில் சிறுபான்மையினங்களை நீக்குவது, தேசிய கீதத்தை ஓரின மொழியில் மட்டும் பாடுவதென அவ்வகை விவகாரங்கள் இனக்குரோதத்தை வளர்த்தே செல்கின்றன. ஏனெனில் தெற்கின் அரசியல் வயலில் விதைக்கப்படும் விதை இந்த இனக்குரோதம்தான். அந்தக் குரோதம் நீண்டு செழிக்கவேண்டுமாயின், நல்லெண்ணங்களை வளர்க்கக்கூடிய கல்விமுறைய கையிலெடுப்பது பொருத்தமானதல்ல. எனவே இலங்கையின் கல்விச்சந்தையில் தொடர்ச்சியாக வன்முறையாளர்கள் உற்பத்தியாகிக்கொண்டேதான் இருப்பர். அவ்வகை கற்ற வன்முறையாளர்களை ஆயுதம் கொண்டோ, சட்டத்தைக் கொண்டோ சீர்திருத்த முடியுமெனின், அடுத்துவரும் பந்தியில் குறிப்பிடப்படும் இலங்கையின் ராகிங் வரலாறு இப்படியாக நீண்டிருக்காது. 1974 ஆம் ஆண்டுடன் இலங்கையில் ராகிங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.
ராகிங் வரலாறு
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற கையோடு, அப்போரில் பங்குகொண்ட இராணுவத்தினர் இலங்கை திரும்பியிருந்தனர். அவர்கள் பிரித்தானிய வாழ்வொழுக்கங்கள் சிலவற்றைத் தம்மோடு கொண்டுவந்தனர். அவ்வாறு கொண்டுவரப்பட்ட பழக்கவழக்கங்களை கல்விக்கூடங்களில் அறிமுகம் செய்தனர். அவ்வகையில் புகுமுக இராணுவத்தினர் மத்தியில் சிரேஷ்ட இராணுவத்தினரால் மனவுறுதியையும், இலக்கில் அசையாத நம்பிக்கையையும் ஏற்படுத்தும் நோக்குடன் ராகிங் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு ராகிங் பெற்ற சில இராணுவத்தினர் பல்கலைக்கழகங்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காக சென்றபோது, அவர்களால் பல்கலைக்கழகத்துக்குள்ளும் ராகிங் சென்றது (https://en.wikipedia.org/wiki/Ragging).1974 ஆம் ஆண்டு வித்தியாலங்கார பல்கலைக்கழகத்தில் (களனி பல்கலைக்கழகம்) கணித பாட பயிற்சி ஆசிரியர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களுடன்கூடிய ராகிங் சம்பவம் இடம்பெற்றது. இதனை விசாரிக்கவென அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா வீ.டபிள்யு.குலரத்ன என்பவர் தலைமையில் விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தார். இவ்விசாரணைகளின் முடிவில் குறித்த ராகிங் சம்பவத்துடன் தொடர்புடைய 12 மாணவர்களும், அவர்களுக்கு உதவியளித்தனர் என்ற குற்றத்தில் ஊழியர்கள் நால்வரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இலங்கையின் ராகிங் வரலாற்றில் ராகிங்கிற்கு எதிராக அரசு மேற்கொண்ட முதற்பெரிய நடவடிக்கையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட மாணவி ரூபா ரத்னாவலி
இவ்வாறானதொரு சம்பவத்தின் பின்னர் 1975 ஆம் ஆண்டே இன்னொரு ராகிங் மிலேச்சத்தனமும் பதிவாகியிருக்கிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் கல்வி பயிலத் தொடங்கியிருந்த ரூபா ரத்னாவலி (22) என்ற மாணவி சிரேஷ்ட மாணவர்களால் ராகிங் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பெண் உறுப்பில் மெழுகுதிரியை திணித்தல் என்ற பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்க இரண்டாவது மாடியிலிருந்து குதித்துள்ளார். அன்றிலிருந்து மாற்றுத்திறனாளியான அவர் மன உலைச்சளால் பாதிக்கப்பட்டு 2002 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டார்.
அங்குனகொல பல்லச விவசாய கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த பிரசங்க நிரோசனா என்ற மாணவி ராகிங்கில் ஏற்படுத்தப்பட்ட உட்காயங்களினால் பாதிக்கப்பட்டநிலையில் இறந்துபோனார்.
தற்கொலைசெய்துகொண்ட மாணவன் எஸ்.வரப்பிரகாஸ்
1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 06 ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ராகிங்கில் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளான பொறியியல் பீட மாணவன் எஸ்.வரப்பிரகாஸ் (21) இறந்துபோனார். அவரின் உடல்நிலையையும் கவனத்தில்கொள்ளாமல் அதிகளவு தோப்புக்கரணங்களைப் போடும்படி சிரேஷ்ட மாணவர்கள் மிரட்டியமையினாலேயே அவரது மரணம் சம்பவித்தது (https://www.facebook.com/photo.php?fbid=2741374205979531&set=pcb.2741374402646178&type=3&theater).
அதேவருடத்தில் அம்பாறையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் கெலும்துசார விஜேதுங்க என்ற மாணவன் ராகிங்கினால் சிறுநீரக செயலிழப்பிற்குள்ளாகி இறந்தார். அதிகளவு மதுபானத்தைக் கட்டாயப்படுத்தி பருக்கி, உடனடியாகவே மோசமான உடற்பயிற்சிகளைச் செய்யுமாறு சிரேஷ்ட மாணவர்கள் பணிக்கவே, இந்த சித்திரவதைகளைத் தாங்காது இறந்துபோனார். தொடர்ந்தும் 2002 ஆம் ஆண்டில் சிறிஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவி சமந்தா விதானகே, 2014 ஆம் ஆண்டில் பேராதெனிய பல்கலைக்கழக மாணவன் டி.கே.நிசாந்த, 2015 இல் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி அமலி சத்துரிக, 2019 ஆம் ஆண்டில் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் டில்ஹான் விஜேயசிங்க என ராகிங்கினால் பாதிக்கப்பட்டு இறந்துபோன மாணவர்களின் எண்ணிக்கை நீள்கிறது.
இப்போதுகூட இக்கட்டுரை எழுதப்படுவதற்குக் கூட, யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப வளாகத்தில் புகுமுக மாணவி மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட பாலியல்வதை தான் காரணமாக இருக்கிறது.
இத்தனை பேர் இறந்தும் மனந்திருந்த முடியாத மனிதர்களாக நமது பிள்ளைகள் வளர்கிறார்கள் எனில், நம் வளர்ப்பு முறையில்தான் தவறு இருக்கிறது. ஒழுக்கத்தின் பெயரால், கற்பித்தலின் பெயரால் இடம்பெறும் சமூக வன்முறைகள்தான் இத்தகைய குற்றங்களுக்கான உளப்பின்னணியைக் கொடுக்கின்றன. இம்மாதிரியான குற்றங்களற்ற சமூகமொன்றை உருவாக்க நினைக்கும் தரப்புக்கள் முதலில் மாற்றத்தை அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். அதுவே நிலைத்து நீடிக்கும்.
ஜெரா