பறிபோகிறது ஓட்டுத் தொழிற்சாலை!!

கூரை ஓடுகள் மற்றும் செங்கல் உற்பத்தி செய்யும் இலங்கையின் மிக பெரிய தொழிற்ச்சாலைகளில் ஒன்றான ஒட்டுசுட்டான் ஒட்டு தொழிற்ச்சாலையை தென்னிலங்கையின் தனியார்
நிறுவனங்களின் ஒன்றான DSI group நிறுவனத்தின் துணை நிறுவனமான Sampson Rajarata Tiles (Pvt.) Ltd திடம் வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை ராஜபக்சே நிருவாகம் ஏற்று கொண்டு இருக்கிறது. ஒரு மாதத்திற்கு 400,000 செங்கல் உற்பத்தி செய்யக்கூடிய இந்த நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதன் மூலம் பிராந்திய மக்களின் நேர்/ நேரில் (direct/indirect) தொழில்வாய்ப்பு, அபிவிருத்தி, சுற்றுசூழல் நலன் பேணல் என சகல விடயங்களையும் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறது ராஜபக்சே அரசாங்கம் 

உண்மையில் முல்லைத்தீவு ஒட்டு தொழில்சாலை , பரந்தன் இரசாயன தொழில்சாலை , வாழைச்சேனை கடதாசி தொழிற்ச்சாலை என தொழில்துறையில் முழுமையாக இயக்குவதற்கு தமிழரசு கட்சி பிரதிநிதிகள் அங்கம் வகித்த நல்லாட்சி அரசாங்கம்   தடையாக இருந்தது. இப்போது ராஜபட்ச நிருவாகம் தங்களுக்கு வேண்டப்பட்ட DSI group என்கிற தனியார் நிறுவனத்திற்கு மீள இயக்குவதற்காக  வழங்குகிறது .ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையால் வாடும் இந்த மாவட்ட மக்கள் பொருளாதார ரீதியாக நனமை, தொழில்வாய்ப்புகள் பெற கூடிய வகையில் அரசாங்கமே மீள் இயக்கப்பட வேண்டிய இந்த நிறுவனத்தை இலாபம் நோக்கம் கொண்ட தனியார் நிறுவனத்திற்கு வழங்கினால் பிராந்திய மக்கள் பெற போகும் நன்மை என்ன ?

உண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 961 குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின்  வேலை­யின்மை வீத­மா­னது 6.1 வீத­மாக காணப்­ப­டு­கின்­றது.வறுமை சுட்டெண் 12.7  வீதமாக இருக்கிறது.  இந்த மக்களின் வாழ்வாதாரததை  அரசாங்க நிறுவனங்களை இலாப நோக்கம் தனியாருக்கு வழங்குவதன் மூலம் மாற்றியமைக்க முடியுமா ?

கடந்த  நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழர் கட்சி ஆட்களை பங்காளிகளாக வைத்து கொண்டு   தென்படுத்தி சிங்கள ஆட்களை அழைத்து வந்து வடக்கு கிழக்கு அரசு நிறுவனங்களில் வேலைகளுக்கு நியமித்தார்கள் .மின்மானி வாசிப்பாளர்கள் தொடக்கம் சாரதிகள் , வைத்தியசாலை சிற்றுளியார் என எல்லாவிதமான அரச பணிகளுக்கும் சிங்கள இளைஞர்கள் இறக்குமதி செய்தார்கள் . எங்கள் தரப்பில் யாருமே பேசவில்லை . அரச நிறுவனங்களுக்கே இந்த நிலை இருக்கும் பொது அரச நிறுவனத்தை தனியாருக்கு வழங்கினால் பிராந்திய மக்களுக்கு கிடைக்க வேண்டிய  தொழில்வாய்ப்புகள் உட்பட பொருளாதார நன்மைகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நல்லாட்சி அரசாங்க காலத்திலும் அரசியல் பின்புலம் கொண்ட தென்னிலங்கை வியாபாரிகளுக்காக உப்பளங்களை அமைக்க அதிகாரப்பூர்வமாகவும் அதிகாரப்பூர்வமற்றதாகவும் கிளிநொச்சியில் குடியிருப்புக்கு அண்மித்த நிலங்களை வழங்கினார்கள். அங்கு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் முடிவு பொருளாக வடக்குக்கு கொண்டு வரப்பட்டு அதிக விலையில் கிளிநொச்சி மக்களுக்கே விற்கப்படுகிறது . கிளிநொச்சி மக்கள் இந்த உப்பளங்கள் மூலம் பெற்று கொண்ட பொருளாதார நலன்கள் என்ன என்று கேட்டால் பதிலில்லை; அதே போல கட்டுமான வேலைகள் பல நடைபெற்றன .இவற்றுக்கான ஒப்பந்தங்கள் மகிந்த ராஜபக்சே காலத்திலும் / நல்லாட்சி அரசாங்க காலத்திலும் தென்பகுதி தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டன/  .இந்த நிறுவனங்கள் தொழிலார்களையும் தெற்கில் இருந்து அழைத்து வந்தன . இதனால் உள்ளூரில் உள்ளவர்கள் வேலைவாய்ப்பில் பாதிக்கப்பட்டார்கள் . இது தான் முல்லைத்தீவு ஒட்டு தொழிற்ச்சாலைகளுக்கும் நடக்கும்.

நிலைத்திருக்கும் அபிவிருத்தியின் பொது மக்கள் பங்காளர்களாக இருக்க வேண்டும. பிராந்திய மக்கள் பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்கை தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அபிவிருத்தி பணிகள் செய்யப்பட வேண்டும். இது பற்றி எல்லாம் எங்கள் மக்கள் பிரதிநிகளுக்கும் அக்கறை இல்லை. மத்திய அரசாங்கங்களுக்கும்  அக்கறை இல்லை .
Blogger இயக்குவது.