கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு போட்டிகள் சொந்த மைதானத்தில் இன்று இடம்பெற்றது!
11 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு போட்டிகள் சொந்த மைதானத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த விளையாட்டு போட்டியில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்கேற்றனர்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த 11 வருடங்களாக விளையாட்டு போட்டிகளை மேற்கொள்ள முடியாத நிலை பாடசாலை சமூகத்தில் காணப்பட்டது.
2008ம் ஆண்டு இறுதியாக இடம்பெற்ற விளையாட்டு போட்டியை அடுத்து இடப்பெயர்வு காணப்பட்டது. தொடர்ந்து குறித்த மைதானம் உட்பட பல பிரதேசங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்டது.
மீள்குடியேற்றத்தின் பின்னர் பாடசாலை விளையாட்டு போட்டியை நடார்த்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட பாடசாலை சமூகம் பல்வேறு தரப்பினர் ஊடாக கோரிக்கைகளை முன்னெடுத்து வந்தது.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தந்தபோதும் குறித்த மைதானம் தொடர்பில் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும் குறித்த அரசாங்கத்தின் காலத்திலும் பாடசாலை காணி விடுவிக்கப்படவில்லை. குறித்த காணியையும் இணைத்து சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குறித்த காணி படையினரால் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அரச அதிகாரிகளினால் குறித்த காணியை பாடசாலையிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் குறித்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் இடையூறுகள் காணப்பட்டன.
இந்த நிலையில் பாடசாலை சமூகம் எடுத்துக்கொண்ட முயற்சியினால் 11 வருடங்களின் பின்னர் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கான சொந்த மைதானத்தில் இன்று திறனாய்வு போட்டிகளை உட்சாகத்துடன் மேற்கொண்டிருந்தனர்.
2500க்கு மேற்பட்ட மாணவர் தொகை கொண்ட கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள் இதுவரை காலமும் கழக மைதானங்களிலும், பாடசாலை முற்றத்திலும் தமது விளையாட்டுக்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.
குறித்த வசதி குறைவின் மத்தியிலும் பல வீரர்கள் தேசிய ரீதியில் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். இந்த நிலையில் குறித்த மைதானம் பாடசாலைக்கு கிடைத்துள்ள நிலையில் தேசிய வீரர்கள் பலரும் உருவாகும் சாத்தியமான சூழல் காணப்படுகின்றது,
2020ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் கிறிஸ்தோபர் கமலராஜன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டதுடன், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், படை உயரதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு நிகழ்வில் மாணவர்களின் ஓட்டம் உள்ளிட்ட திறனாய்வு விளையாட்டுக்கள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ்வு மைதானத்தை அலங்கரித்தமை குறிப்பிடதக்கதாகும்.
11 வருடங்களின் பின்னர் வசதியானதும், விசாலமானதுமான சொந்த மைதானத்தில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.