புதையல் தோண்டிய ஏழு பேர் வாழைச்சேனையில் கைது!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல் பணியின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கண்டி அல்கடுவ, ஹோமாகம மற்றும் கோரகல்லிமடு, கிரான் பிரதேசங்களை சேர்ந்த மும்மதத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் என்பன வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் கூறியுள்ளனர்.