பொருளாதார அறிவு இல்லாதவர் சிதம்பரம்!
மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்திருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் துண்டு பிரசுர பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக பாஜகவினர் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுபாளையம் பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
அப்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ப.சிதம்பரத்தின் பட்ஜெட் நாட்டிற்கு எதாவது நல்லது செய்துள்ளதா..? சிதம்பரம் பட்ஜெட் பூஜியம். அவர் பட்ஜெட் நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்திருக்கிறதா..?அவர் 106 நாள் உள்ளே இருந்திருக்கிறார்,இன்னும் இரண்டு நாள் சேர்த்து 108 நாள் உள்ளே வைத்திருக்கனும்.அவர் பொருளாதாரம் படிக்காதவர். எங்கே பொருளாதாரம் படித்தார். எனவே பொருளாதார அறிவு இல்லாதவர் சிதம்பரம் என்று குற்றம் சாட்டினார் ஹெச்,ராஜா.