ஊடகவியலாளர் ச.தவசீலன் கிளிநொச்சியில் கைது!!


முல்லைதிவில் இருந்து தனது ஊடக பணியாற்றும் ஊடகவியலாளர் ச.தவசீலன் இன்றிரவு கிளிநொச்சியில் காவல்துறையால் கைதாகியுள்ளார்.


வீதிப்போக்குவரத்தை அப்பட்டமாக மீறிப்பயணித்த தென்னிலங்கை பேரூந்து ஒன்று தொடர்பில் தகவல் திரட்ட முற்பட்ட நிலையில் அவர் காவல்துறையால் கைதாகி கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்,கேப்பாபுலவு காணி விடுவிப்பென மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் அவர் முன்னின்று செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.