கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.!!


வவுனியா ஓமந்தை அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் கிணறென்றில் இருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் வசிக்கும் அர்ஜூனன் அருண்குமார் (26) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரே இன்று (28) கிணறு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.நேற்று நள்ளிரவில் இருந்து குறித்த இளைஞரைக் காணவில்லையென உறவினர் தேடிய நிலையில் இன்று காலை குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.






Blogger இயக்குவது.