மதம் பிடித்த மனிதம் - கவிதை!!

மதம் என்ற பெயரில்
மனிதத்தின் முகத்தில்
இரத்தக் கறைகள்
வேண்டாம்
தாங்கமுடியா வலி.


இதை பார்த்த கடவுள்
இந்நேரம்
தற்கொலை
செய்துகொள்ளட்டும்..

ஒட்டி உதிரும்
மணல் துகள்போல
தேசத்தில் மார்பில்
மரணம் உதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது...

மக்களுக்கு
வாழ்வும் சுதந்திரமும்
சுபிட்சமாயில்லை
என்றபோதும்
மதங்களின் பெயர்களில்
எரித்துக்கொண்டிருக்கிறார்கள்
மனிதத்தை...

பிளவு பட்டுக் கிடக்கும்
இனங்களும் மதங்களும்
ஒன்றின் கண்ணை
ஒன்று கொத்தித் தின்றபடி.
மனிதம் வறண்ட பூமியில்
தவிக்கிறது...

அகிம்சை வழி சுதந்திரம்
பெற்ற பாரத மாதாவின்
இன்றைய நிலைதான் என்ன...?

-சங்கரி சிவகணேசன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.