'தளபதி 65' பட நாயகி விஷயத்தில் திடீர் திருப்பம்!!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான ’தளபதி 65’ திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


இந்த நிலையில் சமீபத்தில் ’தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் மற்றும் தெலுங்கு பட நாயகி பூஜா ஹெக்டே நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது

ஆனால் தற்போது வந்த தகவலின்படி திடீர் திருப்பமாக ’தளபதி 65’ படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே ’மாஸ்டர்’’படத்தின் ஹீரோயினாக அவர்தான் பேசப்பட்டு வந்தார். பின்னர் திடீரென மாளவிகா மோகனன் ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே

சமீபத்தில்கூட பேட்டி ஒன்றில் விஜய் குறித்து புகழ்ந்து பேசிய பேசி அவருடைய தீவிரமான ரசிகையாக அடையாளம் காட்டிக் கொண்ட ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. ’தளபதி 65’ படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தான் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.