பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பது குறித்து இன்று (03) சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


குறிப்பாக சிறு குழந்தைகள், முதியவர்கள், நீண்ட கால இதய நோய்க்குள்ளானவர்கள் மற்றும் வெட்டவெளிகளில் தொழில் புரிவோர் என பலர் இந்த வெப்பமான காலநிலையால் வெகுவாக பாதிக்கப்படுவர்.

அதேபோல் இந்த வெப்பமான கால நிலையால் இதய நோய், நுரையீரல் நோய் போன்றவை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அதிக உஸ்ணம் காரணமாக இதய பதற்றம் (Heat Stress), தசைப் பிடிப்பு, மயக்கம் போன்ற நோய்கள் ஏற்படகூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் குளிர்ந்த, இடங்களில் ஓய்வெடுப்பது, போதுமான அளவு தண்ணீர் குடித்தல், தசைகள் மீது அழுத்தம் கொடுப்பது, அதிகமாக வியர்வை வெளியேறல், பசியற்ற தன்மை, அதிக தாகம் அல்லது சோர்வு ஏற்பட்டால் ஆடைகளை தளர்த்துவது போன்ற அனைத்து செயல்களையும் தவிர்க்கவும் வேண்டும்.

இவ்வாறான காலநிலையால் உலக நாடுகளை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதை கருத்தில் கொண்டு நீண்ட மற்றும் குறுகிய கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறுகிய கால திட்டங்களாக அடிக்கடி தண்ணிரை பருகுதல், சீனி அதிகம் கலந்த பானங்களை பருகுதல், வெளியில் செல்லும் போது குடையை பாவித்தல், வெப்பமான நேரங்களில் (காலை 11:00 - மாலை 3:00 மணி வரை) தொப்பியைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

அதேபோல் உடலுக்கு இலகுவான பருத்தி ஆடைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுள்ள சுகாதார அமைச்சு தேவையேற்படின் மருத்துவ சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் இந்த வெப்பம் காரணமாக நீரூற்றுகள் வறண்டு போக வாய்ப்புள்ளதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், தேவையற்ற மின் விளக்குகளை அணைத்தல், குளிரூட்டிகள் பயன்பாட்டை குறைத்தல், மற்றும் குப்பைகளை எரிக்காது மாற்றுவழியை பயன்படுத்துதல் ஆகியவை நீண்டகால தீர்வுகளாக சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறான கால நிலையால் ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படின் 0710107107 என்ற இலக்கத்தை அழைத்து சுகாதார பிரிவுக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை கேட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.