பதுளையில் தந்தை மற்றும் மகனுக்கு கொரோனா


கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகிக்கபப்ட்ட இருவர் பதுளை பொது வைத்தியசாலையின் விசேட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொது வைத்தியசாலையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்டாரவளை ஹீல் ஓயா அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான தந்தையும் அவரது குழந்தைக்கும் இவ்வாறு கொரோனா தொற்று இருக்கலாம் என வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் தென் கொரியாவில் இருந்த கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி இலங்கை வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போது தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Powered by Blogger.