இலங்கை மருந்தகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

இலங்கையில் தட்டுப்பட்டில் உள்ள மருத்துவ முக கவசங்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அமைந்துள்ள மருந்தகங்கள் தற்போரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச மருந்தகங்கள் கூட்டுத் தாபனத்தின் நிர்வாக இயக்குனர் லலித் ஜயகொடி ,

மருத்துவ முகக் கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் , அங்கு கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததன் காரணமாக இறக்குமதி நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார் .

எமது நாடு மாத்திரமன்றி சீனாவில் கூட தற்போது மருத்துவ முகங்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறதாகவும் அங்கு மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய தொழிற்சாலைகள் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக மருத்துவ முக கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.