யாழ்.பல்கலை வளாகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பதற்றம்!!
இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும் என யாழ்.பல்கலை சூழலில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் உடனடியாக சகல விதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும். இளைஞனார்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எவராலும் காப்பாற்ற முடியாமல் போகும்.
இங்கு இனி வாய்ப்பேச்சுக்கு இனி எதுவும் இல்லை. ஆனால் செயலில் செய்வதற்கு நிறைய உண்டு. மக்கள் அனைவரும் நாம் யார்? எமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவேண்டும்.
தமிழர் தேசத்தின் கலை,பண்பாடு கலாசாரம் இவற்றை கருத்தில் கொள்ளும் அரசாங்கம் மட்டுமே எமக்கு வேண்டும். அத்தோடு எமது கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பது எமது கடமை இனிவரும் காலங்களில் சமூக விரோத செயல்களுக்கு குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.
பெண்கள் மீது கைவைத்தாலோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ அதற்கு தண்டனை வழங்கப்படும். “தடை கற்கள் உண்டு என்றால் தடை தாண்டும் கால்களும் உண்டு” என தெரிவித்து குறித்த துண்டு பிரசுரத்தில் தமிழ் இளைஞர் படையணி மண்ணின் மைந்தர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo