கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!

கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு திடீரென சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தெரியவருகின்றது.


இதற்கான திட்டத்தை சிறிலங்கா பொலிஸ் துறையின் சிறப்பு அதிரடிப்படை நடைமுறைப்படுத்தவுள்ளது.

வழிபாட்டு நேரங்களில் இந்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் தேவாலயங்கள் மற்றும் தேவாலயப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிக்காக, சிறப்பு அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் அணியொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் நடமாடும் சந்தேகநபர்களை மோட்டார் சைக்கிள் அணியை சேர்ந்த சிறப்பு அதிரடிப்படையினர் சோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திடீரென அதிகரிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு நடவடிக்கையால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, நீர்கொழும்பு – பெரியமுள்ள பகுதியில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.