புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் பார்த்திபன்!!

கணவன் மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி இயக்கிய ’விக்ரம் வேதா’ திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் அமீர்கானை வைத்து ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தற்போது தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெப்சீரிஸ் ஒன்றை இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கவுள்ளனர்.


இந்த வெப்சீரிஸில் நடிகர் கதிர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த சீரிஸில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இணைந்துள்ளார்.

இது ஒரு முழுக்க முழுக்க நகைச்சுவை சீரியஸாக இருக்கும் என்றும் இந்த வெப்சீரீஸின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வெப்சீரீஸை அமேசான் பிரைம் மற்றும் புஷ்கர் காயத்ரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.