'ஜானு' தோல்வி- சமந்தாவின் பதிலடி!!

விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படம் ’96’. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கேரக்டரில் சமந்தா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தபோதிலும், இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரூபாய் 15 கோடி நஷ்டம் என்றும் கூறப்பட்டது.


இந்த நிலையில் தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கொடுத்து வந்த சமந்தா, ஒரே ஒரு தோல்விப்படம் கொடுத்தவுடன் ரசிகர்களும் இணையதளங்களும் ஒருசில ஊடகங்களும் சமந்தாவை கடுமையாக விமர்சனம் செய்தன. இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமந்தா கூறியதாவது:

ஒரு கதாநாயகன் தொடர்ந்து 3 தோல்வி படங்கள் கொடுத்தாலும், அவரது படங்கள் வரும்போது ரசிகர்கள் தியேட்டர்களில் சென்று பார்க்கிறார்கள். ஆனால் கதாநாயகி தோல்வி படம் கொடுத்தால் மட்டும் குறை சொல்கிறார்கள். கதாநாயகனுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு சம்பளமும் கொடுப்பது இல்லை. நடிகைகளும் நடிகர்களைப்போல் கடுமையாக உழைக்கத்தான் செய்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.