வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை!!

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி மொஹான் ஆரியதிலக தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த கிணறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரும்வரை வெந்நீரூற்று கிணறு சுற்றாடல் பகுதி மூடப்படுவதாக கூறினார்.

இதேவேளை நிலாவெளியில் உள்ள பறவைகள் தீவும் நேற்று முதல் 2 வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வன ஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் கீர்த்தி சந்திர ரத்ன தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.