'கொரோனா' பெயரில் புதிய தமிழ்ப்படம்!

உலகின் அனைத்து நாட்டு மக்களும் கொரோனா குறித்து பேசி வரும் நிலையில் இதையே ஒரு டைட்டிலாக வைக்க தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


மனித இனத்தையே அழித்துவிடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கொரோனாவை வைத்து வியாபாரம் செய்யவும் சிலர் முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில் கொரோனா டிசைனில் சேலை வெளிவந்தது என்பதும் அதனை வாங்க பெண்கள் விருப்பப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’கொரோனா பயம் இல்லை’ என்ற பெயரில் புதிய படத்துக்கான பெயர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் இந்த டைட்டிலை பதிவு செய்தவர் யார்? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் இந்த டைட்டிலில் திரைப்படம் எடுப்பது யார்? என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.