கொரோனா -படப்பிடிப்புக்கு சென்ற முழுமாத கர்ப்பிணி நடிகை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ என்ற சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகிய இருவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே


இந்தநிலையில் ஆல்யா மானசா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஆல்யா மானசா ஒரு விளம்பரப் படத்தில் கணவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த விளம்பர படத்தின் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில் ஓய்வு எடுக்க வேண்டிய நிறைமாத கர்ப்பிணியை விளம்பர படத்தில் நடிக்க வைத்தது சரியா என சஞ்சிவ் கார்த்திக்கை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதான் சஞ்சீவ் கார்த்திக் தனது மனைவியை நடிக்க வைத்ததாகவும், ஆல்யாவின் முழு சம்மதத்துடன் தான் இந்த படப்பிடிப்பு நடந்தது என்றும் கூறப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.