டொக்டருக்கு ஒரு "salute" - கவிதை!!


ஓடி ஆடித் திரிஞ்சவங்க எல்லாம்
ஓய்வெடுத்து வீட்டில இருக்க
உனக்கென்ன நீ டொக்ரர்
எண்டு சொன்னவங்க எல்லாம்
எங்களோட வந்து நீண்டு
ஒருக்கா பாத்திட்டு
போங்கோ....


மாட்டு சாணத்த பாத்து
சீச்சி எண்டவனும்
கொமட் கிளீன் இல்ல
வீடு சுத்தம் இல்ல
சாப்பாடு அவியாட்டி
கத்துறவனும்
ஒருக்கா பாத்திட்டு
போங்கோ

நாளுக்கு நாள்
எத்தனை அரியண்டங்களைப்
பார்க்கிறோம்
உங்களைக் காப்பாற்ற எங்களை
மாற்றிக் கொள்கிறோம்
வீட்டை மறந்து நாள் பூராக
நாட்டுக்காக சேவை செய்கிறோம்
வீட்டில் இருந்து கொண்டு
கொரோனாவை இழுத்து
சமயபிரசாரங்கள் செய்து
சண்டை பிடிக்கிறீர்கள்
வேலை இல்லா திண்டாட்டம்
என்பது இது தானோ?

மனிதன் சாகும் நேரத்திலும்
சமய பிரசங்கம் செய்கிறான்
அதற்குள் இரண்டு சமயங்கள்
நான் பெரிதா நீ பெரிதா
என்று சண்டை வேறு...
திருந்தாத ஜென்மம் என்று
ஒன்று உண்டு என்றால்
அது மனித ஜென்மமே..

ஆளுக்காள் அடிபடாமல்
அன்றோன் சொன்னதை கடைப்பிடியுங்கள்
வீட்டு வாசலை சாணம் இட்டு மெழுகுங்கள்
மஞ்சல் தெளித்து
வீட்டை சுத்தம் செய்யுங்கள்
மஞ்சல் வேப்பிலை அரைத்து
குளியுங்கள்
வெளியே சென்று வந்தால்
சவர்க்காரம் இட்டு கை கழுவங்கள்..

நாங்க வைத்தியர் தான்
நாட்டுக்கு சேவை செய்யும்
ஊழியன் எண்டு சொல்வதில்
இன்னும் பெருமை எனக்கு..

கொரோனா எண்ட தொற்று நோய்
உலகம் முழுக்க ஆளுது
இஞ்சினியருக்கு லீவு
ரீச்சருக்கு லீவு
லோயருக்கு லீவு
எக்கவுண்டனுக்கு லீவு
அமைச்சருக்கு லீவு
ஜனாதிபதியும்
வீட்டில இருந்து
வேலை செய்ய
நாங்களும் ஒருக்கா
லீவு எடுத்தா
நிலமை நன்றோ?

கொரோனா எண்டு சொல்லி
வீட்டில படுத்துக்கிடக்க
பொருட்கள ஸ்ரொக்ல எடுத்து
வீட்டில உண்ணும் போதும்
எங்களுக்கு வலிக்கையிலும்
பல விதத்தில் பெருமை கொள்கிறோம்
எங்களால் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று..

அழுவது நாமாக இருந்தாலும்
அடுத்தவன் அழமால் இருப்பதற்காக
போராடுகிறோம்...
எங்களுக்கும் மனைவி இருக்கிறது பிள்ளைகள் இருக்கிறார்கள்
பெற்றவர்கள் இருக்கிறார்கள்..
ஆனால் அவர்களை பார்க்க கூட முடியவில்லை..
உங்களோடு இருந்து
உங்களைக் காப்பாற்ற போராடி விட்டு
வீட்டற்கு போக முடிவதில்லை
எனக்கு தொற்றிக் கொண்டால்
என் குடும்பத்தை பாதித்து விடுமோ என்று

என் பிள்ளைகள் பட்டினி கிடக்கிறார்கள்
பெற்றவன் ஊரானுக்கு வைத்தியம் பாக்க
பிள்ளைகளுக்கு உணவு பொருட்கள் வாங்கி கொடுக்க முடிவதில்லை..
எல்லா மனைவிமாரைப் போல் என்
மனைவி என்னால் எந்தவித சந்தோசங்களையும் அடைந்ததில்லை..
ஏனெனில் நான் வீட்டிலேயே நிற்பதில்லை..
எல்லா பெற்றவர்களைப் போலும் நான் என்
பெற்றவர்களை சந்தோசமாக கவனிப்பதில்லை
காரணம் நான் வைத்தியன்...

வைத்தியர்கள்,தாதியர்கள்,வைத்திய சாலையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்காக நாம் போராடா விட்டாலும் அவர்களது சேவைக்காக ஒரு "salute"
எழுத்தோடு முல்லைக்கவி தனுஜா விசுவமடு

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.