கனடா பிரதமர் மனைவி கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டார்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ அதிலிருந்து பூரண குணமடைந்துள்ளார்.


கடந்த 12ம் திகதி சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சைகளுக்கு பின்னர் சோஃபி பூரண குணமடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குணமடைந்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள சோஃபி, நான் பூரண குணமடைந்துள்ள அதேவேளை எனது மருத்துவர் மற்றும் ஒட்டாவா மருத்துவ பிரிவு என்பனவற்றினூடாக நலம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் குறித்த கருத்தினை தனது முகப்புத்தகத்தின் வாயிலாக கனேடிய மக்களுக்கு நேற்று காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ளார்.

கனடாவின் முதல் பெண்மணியான சோஃபி ஜோர்ஜ் ட்ரூடோ, பிரித்தானியாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பியதை தொடர்ந்து, கடந்த 12ம் திகதி வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சோஃபி தனிமைப்படுத்தப்பட்டதுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

மேலும் குறித்த காலப்பகுதியில், ஜஸ்டின் ட்ரூடோ வீட்டில் இருந்தவாறே அலுவலக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.