தம்புள்ளை நிகவதவனவில் 33 பேர் தனிமைப்படுத்தல்!!

கண்டி அக்குரனவில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் சென்ற தம்புள்ளை நிகவதவன பகுதியில் 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


7 வீடுகளை சேர்ந்த குறித்த 33 பேரையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிசார் இன்று தனிமைப்படுத்தியுள்ளனர்.

அக்குரனை பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுடன் சில தினங்களின் முன்னர் அடையாம் காணப்பட்டிருந்த நிலையில், அவர் சென்று வந்த இடங்களை புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்தபோது, தம்புள்ளை நிகவதவன பகுதியில் மரண வீடொன்றிற்கு அவர் சென்றிருந்தமை தெரிய வந்தது.

தம்புள்ளை நிகவதவன பகுதியில் உள்ள ஒரு வர்த்தகரின் இல்ல மரண வீட்டிலேயே அவர் கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து அந்த பகுதியில் இன்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசார் நடத்திய விசாரணையில், கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் பழகிய, அருகிலிருந்த 33 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அந்தவகையில் மரணம் நடந்த வீடு உள்ளிட்ட 7 வீடுகளை சேர்ந்த 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.