தொடருந்து அனுமதி சீட்டுக்கள் இன்று முதல் சோதனைக்கு


தொடர்ந்துகளில் முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான அனுமதி சீட்டுக்கள் இன்று(04) முதல் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தொடர்ந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வெளிநாட்டு கடவுச் சீட்டு இலக்கம் குறிப்பிடப்பட்ட அனுமதிச் சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு புகையிரத திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைய முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் பயணிக்க முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 18 வயதிற்கு குறைந்த, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக பெற்றோரின் அடையாளப்படுத்தல் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.