கொரோனா நோயாளர்களுக்கு இலங்கையில் வெற்றி ரோபோக்களின் உதவியுடன் சிகிச்சை

கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு ரோபோக்களின் உதவியுடன் சிகிச்சைகளை அளிக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டம் வெற்றியளித்துள்ளது.


வைத்தியர்களுக்கும், நோயாளர்களுக்கும் இடையில் ரோபோக்களை கொண்டு பரிசார்த்த நடவடிக்கை ஹோமாகம வைத்தியசாலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அட்லஸ் பொறியியலாளர்கள் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ரோபோக்களின் செயற்பாடுகளை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவின் கண்காணித்து வருகின்றார்.

நோயாளர்களுக்கு மருத்து வகைகளை கொண்டு செல்லுதல், உணவுகளை கொண்டு செல்லுதல், சிகிச்சைகளுக்கு உதவி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை குறித்த ரோபோக்கள் முன்னெடுத்துள்ளன.

இதன்படி, ரோபோக்களை கொண்டு முன்னெடுக்கப்பட்ட பரிசார்த்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் 25 ரோபோக்களை இந்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பிலான வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டார்.
Blogger இயக்குவது.