இருந்த வேலையையும் இழந்து, வந்த வேலையயும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் பட்டதாாிகள்..!

அரசாங்கத்திடன் பட்டதாாி பயிலுனா் நியமனத்தை நம்பி இருந்த வேலையையும் கைவிட்ட பட்டதாாிகள் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக தாம் இப்போது நடு தெருவில் நிற்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.


இது குறித்து பாதிக்கப்பட்ட பட்டதாாிகள் கூறுகையில், அரச நியமனம் கிடைக்காத நிலையில் அன்றாட வாழ்வாதாரத்திற்காக தனியார்துறைகளில் தாம் பணிபுரிந்த நிலையில் தமக்கான நியமனம் வழங்கப்படுவதாக அரசு அறிவித்ததோடு நியமனக் கடிதங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றதாக கடந்த ஒரு மாதமாக விளம்பரப்படுத்தியது.

இதன் காரணமாக பணிதந்த இடத்தில் இருந்து முன் அறிவித்தல் இன்றி விலகிச் சென்று அங்கு நெருக்கடியினை ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கில் முற்கூட்டியே எமது விலகலை அறிவித்தோம்.

இதன் காரணமாக் சில இடத்தில் எமக்கான பதில் ஆளணி எடுக்கப்பட்டது. இந்த நிலையிலேயே எமக்கு நியமன கடிதமும் கிடைத்தபோது தனியாா் துறையிலிருந்து வெளியேறி அரச சேவையில் ஒரு நாள் பணிபுரிந்த நிலையில் மறுநாள் பணிக்குச் சென்ற நேரத்தில் எமக்கு பணி இல்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் பழைய தனியாா் நிறுவனங்களை அணுகி வேலைவாய்ப்பு கேட்ட நிலையில் எந்த நேரத்திலும் அதனை நாம் கைவிடுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் மறுப்பு தொிவிப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் அரசாங்கத்தை நம்பி தமது வாழ்வாதரத்தினை இடந்து தாம் நடுத்தெருவில் நிற்பதாக பாதிக்கபட்ட பட்டதாாிகள் கூறியுள்ளனா்.
Blogger இயக்குவது.