ரஷ்ய அதிபருடன் கை குலுக்கிய மருத்துவருக்கு கொரோனா!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கடந்த வாரம் கை குலுக்கிய தலைமை மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


உலகையை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் ரஷ்யாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவினால் இதுவரை 24 உயிரிழப்புகளும், 2777 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். கொரோனா தொடர்பாக தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மார்ச் 24ம் தேதி மாஸ்கோ அருகிலுள்ள Kommunarka எனும் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.

அப்போது அந்த மருத்துவமனை தலைவர் Denis Protsenko என்பவரை அதிபர் சந்தித்து கை குலுக்கினார். இந்த நிகழ்வின் போது இருவரும் முகக் கவசம், கையுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி இருந்துள்ளனர்.

 ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் தற்போது மருத்துவமனை தலைவர் Denis Protsenkoக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.