கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் சென்னைக்கு முதலிடம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள்தான் முன்னிலையில் இருந்து வந்தது. தமிழகத்தில் நாள்தோறும் ஒன்று, இரண்டு பேர் என பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது.
இப்படியிருக்கையில், டெல்லி இஸ்லாமியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்ளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நாளுக்கு நாள் கொத்து கொத்தாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. சென்னையில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 58 பேரும், திண்டுக்கல்லில் 45 பேரும், நெல்லையில் 38 பேரும், ஈரோட்டில் 32 பேரும், நாமக்கல்லில் 25 பேரும், ராணிப்பேட்டையில் 25 பேரும், தேனி, கரூரில் தலா 23 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

.jpeg
)