இறந்த 3 நாள் கழித்து உறுதியான கொரோனா

71 வயது முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழக்க,  அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோர் மரண பீதியில் இருக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 71 வயது முதியவர், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவர் துபாய் சென்று திரும்பியவர்.

அவருக்கு சுகாதாரத்துறை சார்பில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிலமணி நேரங்களிலேயே முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

அதன் பிறகு அவரது உடல் சொந்த ஊரான கீழக்கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரின் இறுதிச் சடங்கில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், முதியவரிடம் ஏற்கனவே எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில், அவருக்கு கொரோனா இருப்பது 3  நாள் கழித்து இன்று தெரிய வந்தது. அதனால், உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினர், இறுதிச் சடங்கில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

கீழக்கரையில் உள்ள முதியோரின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 தெருக்களுக்கான பாதைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.
Blogger இயக்குவது.