தோனி ரசிகர்களுக்கு உகந்த நாள்

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தான் அணிக்கும் எதிரான ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினம் மாநகரத்திலுள்ள Dr. YSR கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி நான்காவது ஓவரிலேயே சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை இழந்தது. அப்போது சில மேட்ச்களை மட்டும் விளையாடிய மகேந்திர சிங் தோனி ஒன்-டௌன் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.


அப்போது மறுமுனையில் விரேந்தர் சேவாக் அரை சதமடித்து அவுட்டான பிறகு ராகுல் டிராவிட் களமிறங்க அவரும் தோனியும் சிறப்பாக விளையாடி இணைந்து 149 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 356 ரன்கள் வரை உயர்த்த உதவினர். இந்த போட்டியில் தான் 15 வருடம் இந்திய கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த மகேந்திர சிங் தோனி முதல் சதத்தை எட்டினார்.


இந்த போட்டியில் அவர் 123 பந்துகள் எதிர்க்கொண்டு 148 ரன்கள் குவித்தார். இதில் 15 பௌண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் அப்போதைய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவின் நான்கு விக்கெட்களின் உதவியுடன் பாகிஸ்தான் அணியை 298 ரன்களுக்கு சுருட்டி வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது
Blogger இயக்குவது.