மீன் விற்பனையில் பாரிய நெருக்கடி- திருமலை மீனவர்கள்!

நாட்டில் நடைபெற்றுவரும் ஊரடங்கு சட்டக் காலப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டபோதும் அதனை விற்பனை செய்வதில் பாரிய நெருக்கடிகளை தாம் சந்திப்பதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மத்திய மீன் சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு குறித்த மீன்களை ஏற்றுமதி செய்யும்போது பல அனுமதிப்பத்திரங்களை தாம் பெறவேண்டிய நிலையில் உள்ளதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
முன்னர் தத்தம் பொலிஸ் பிரிவுகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது சுகாதார வைத்திய அதிகாரியின் சான்றிதழ் பெறப்படாவிடின் போக்குவரத்திற்கான அனுமதி மறுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறிருக்க தாம் அனுமதியினைப் பெறுவதற்கு சுகாதார வைத்திய அதிகாரியிடம் தொடர்புகொண்டபோது அவர் அனுமதிப்பத்திரம் வழங்கவேண்டுமாயின் அரச அதிபர் தமக்கு எழுத்து மூலம் அறிவித்தல் தரவேண்டும் என தெரிவிப்பதால் இப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள எவ்வித வழிமுறைகளும் தெரியவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பிடிக்கப்பட்ட மீன்களை தமக்கு விற்க முடியாது பாரிய நட்டத்தினை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் மீன்பிடித் திணைக்களமானது தமது மீன்களை கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்றபோதிலும், அதனை அவர்களுக்கு விற்பனைசெய்தால் அதற்கான கொடுப்பனவுகள் தமக்கு தாமதமாகவே கிடைக்கப்பெறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்காரணமாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏதேனும் வழிமுறைகளை தமக்கு உடனடியாக செய்துதரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.