அம்பாறையில் முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாட்டினை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.


அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை(18) மாலை 4.30 மணியளவில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர் சுடர் ஏற்றினார்.

தொடர்ந்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்ட சமூக சேவகர்கள் மெழுகுதிரிகளை எரித்து குறித்த வரலாற்று சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கான பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

அத்துடன் நிகழ்வில் மௌன பிராத்தனை முன்னெடுக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலம் தொடர்பாக பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படுவதன் ஊடாக ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச பொறிமுறையினூடாக நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அங்கு உரையாற்றிய அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.