முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல்-பிரித்தானியா

உலகத் திசை எங்கும் வாழும் உறவுகள் அனைவரையும் இணைத்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியக் கிளையினரும், தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து இணைய வழியூடாக தமிழின அழிப்பு நினைவு நாளின் நினைவு வணக்க நிகழ்வு இன்று ( 18.05.2020 ) நடைபெற்றது.


நிகழ்வினை திரு நவம் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார் . தொடர்ந்து பிரித்தானியக் கொடியினை திரு.குமரனும், தமிழீழத் தேசியக் கொடியினை இளையோரமைப்பைச் சேர்ந்த திரு. சாரங்கனும் ஏற்றி வைத்தார்கள் . நினைவுச் சுடரினை செல்வி.வசிகா கமல் ஏற்றிவைத்தார் . நினைவுக் கல்லறைக்கான மலர் மாலையினை திரு.கமல் அவர்கள் அணிவித்ததைத் தொடர்ந்து இணைய வழியினூடாக இணைந்திருந்த மக்களும் தங்கள் வீடுகளில் வைக்கப்பட்ட நினைவுக் கல்லறைகளுக்கு மலர் தூவி சுடர் வணக்கம் செலுத்தினார்கள் .

தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்க முடியாது அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது. முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் இருந்து தப்பி, இறுதியாக தனது தந்தையைப் பார்த்தபோது வெறும் 4 வயதாக இருந்த செல்வி. கலையரசி கனகலிங்கம் அவர்களின் உரையினை தொடர்ந்து, தமிழீழ மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பயிற்சி பெற்று 1993 ல் இருந்து இறுதி யுத்தம் வரையில் முன்னின்று மருத்துவ துறையில் சேவையாற்றிய தமிழீழ மருத்துவ கலாநிதி ஜோன்சன் அவர்களின் உரையும், திருமதி அன்னலக்ஸ்மி ஜெயபாபு அவர்களின் "எங்களுடைய ஈழ தேசமானது முள்ளிவாய்க்கால் மண்ணில் கொண்ட அவலநிலை" என்ற தலைப்பிலான கவிதையும் இடம்பெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.