அயோத்தி இராமர் கோயில் கட்டுமான இடத்தில் உடைந்த சிலைகள் கண்டெடுப்பு!

அயோத்தி இராமர் கட்டுமான இடத்தில் சில உடைந்த சிலைகள் மற்றும் பிற கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அயோத்தி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நிலத்தை சமப்படுத்தும் பணிகள் மே மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளன.
இதன்போது   5 அடி சிவலிங்கம்,  7 கருப்புத்தூண்கள்,  6 செம்மணற்கல் தூண்கள்,  மற்றும் தெய்வங்கள்,  பெண் தெய்வங்களின் உடைந்த சிலைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பதாக பௌத்த குழு ஒன்று இராம ஜென்ம பூமியில் பௌத்த தூபி இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது சிவலிங்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால்,  உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.