யாழ்.உட்பட பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையில் மழையுடனான காலநிலை தொடங்கியவுடன் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 11 மாவட்டங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அந்தவகையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 413 ஆக உள்ளது என்றும் மே மாதத்தின் முதல் வாரத்தில் 96 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜனவரி 1 முதல் மே 8 வரையிலான காலப்பகுதியில் கொழும்பு (2,722 பேர்) , கம்பஹா (1,612), மட்டக்களப்பு (2,069), திருகோணமலை (2,152), கண்டி (1,117), யாழ்ப்பாணம் (1,755) ), களுத்துறை (971), காலி (953), கல்முனை (829), குருநாகல் (648), இரத்தினபுரியில் (593) நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதுடன் மழையுடனான வானிலையும் ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகம், நகராட்சி மன்றம் மற்றும் நகர சபை ஆகியவற்றுடன் இணைந்து, ஜூன் மாதத்தில் டெங்கு ஒழிப்பு திட்டம் ஆரம்பிக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.