மக்களே இனி நீதி மய்யமாக வேண்டும்: கமல்ஹாசன்
சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட மனுதாரர்களின் மனு மீது, ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை’ விதிக்கப்பட்டது. மே 8 ஆம் தேதி விதிக்கப்பட்ட இந்தத் தடைக்கு எதிராக மே 9 ஆம் தேதியே உச்ச நீதிமன்றம் சென்று அப்பீல் செய்த தமிழக அரசு, இன்று, “டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், நாளை முதல் மதுக்கடைகளைத் திறக்க ஏற்பாடுகளை ஜரூராக செய்து வருகிறது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மே 8 ஆம் தேதி, “நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி” என்று மகிழ்ந்திருந்தார் கமல்ஹாசன்.
ஆனால் ஒரே வாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மூலம் டாஸ்மாக் கடைகள் திறப்பு உறுதியாகிவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது. உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைக் காலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
-வேந்தன்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo