சுஷாந்த் தற்கொலை – சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு


டோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணியில் சல்மான் கான் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் இருப்பதாக பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது மரணம் பொலிவூட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், தூக்குக் கயிறு கழுத்தில் இறுக்கியதால் மூச்சு திணறி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்திருந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார். சல்மான் கான் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தம் காரணமாக சுமார் 7 படங்களில் இருந்து சுஷாந்த் சிங் நீக்கப்பட்டதாகவும், அதனால் பட வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் சுதிர்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதில் பிரபல நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.