குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா இறந்த வைரஸ்!

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா இறந்த வைரஸ்ஸே. பயப்படத் தேவையில்லை.


கொரோனா வைரசினால் பீடிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் வைரஸ் ஏற்பட்டுள்ளது இது இறந்த வைரஸ் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் இருந்து கடந்த மாதம் 18 ஆம் திகதி நாடுதிரும்பிய அனுராதபுரம் கெப்பத்திகொல்லாவ
சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து கடந்த இரு நாட்களுக்கு முன் PCR பரிசோதனையில் அவருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

இதையடுத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின் வீட்டிற்கு சென்ற பெண்ணுக்கு வீட்டில் நேற்று காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் மீள சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு நடத்திய PCR பரிசோதனையில் கொரோன தொற்று இனங்காணப்பட்டுள்ளது என அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த பெண் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்டுத்தப்பட்டிருந்தார்.

இதுகுறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்தியர் அனில் ஜாயசிங்க தெரிவிக்கையில்

கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்றுறியான பல சந்தரப்பங்கள் உள்ளன. எனினும் அந்த வைரஸ் ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு பரவாது குறித்த உயிரியல் மாதிரிகள் இறந்த மாதிரிகளாக கருதப்படும் எனவே இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மூவர் தனிமைப்படுத்தலில்.

பெண்ணுக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து இவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.