அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம்: கமல்ஹாசன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.தமிழகத்திலேயே தலைநகரமான சென்னையில் தான் மிக அதிக அளவிலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள்‌ தங்கள்‌ பிரச்னைகளைத் தெரிவிக்கவும்‌, அதற்கான தீர்வுகளைத் தேடுவதற்கும் ‘நமக்கு நாமே’ என்ற திட்டத்தை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். இது தன்னார்வலர்கள் மூலமாக ‘மக்களால்‌ மக்களுக்காக முன்னெடுக்கப்படும்‌ இயக்கம்’என்று அவர் அறிவித்தார். மேலும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து சென்னை மக்களுக்கு உதவ முன்வரலாம் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கங்களில் அவர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இளைஞர்களே!
நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம்!
நாமே தீர்வாக மாறுவோம்.
இணைந்து மீட்போம் சென்னையை...
Call 6369811111
இதைப் பற்றி 1,196 பேர் பேசுகிறார்கள்

அந்த வகையில் நேற்று(ஜூன் 9) வெளியிட்ட வீடியோ ஒன்றில் ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இளைஞர்களே! நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம்!’ என்று அவர் கூறியுள்ளார்.மேலும் மற்றொரு வீடியோவில், ‘கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட, பொருளாதார வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அதிகம். தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களே, வாருங்கள், பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சமாக அமைவோம்!’ என்றும் அவர் குறிப்பிட்டு வருகிறார்.

கமல்ஹாசனின் வீடியோ பதிவுகளும், அவரது நமக்கு நாமே திட்டமும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா
Powered by Blogger.