சீயான் விக்ரம் 60வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் அவர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் ’கோப்ரா’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் தற்போது கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதும், லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படங்களின் படப்பிடிப்பு தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’விக்ரம் 60’ என்ற திரைப்படம் குறித்த செய்திகள் வெளியானது. இந்த திரைப்படத்தை ’மாஸ்டர்’ பட தயாரிப்பாளர்கள் லலித் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் லலித் தனது சமூக வலைத்தளத்தில் ’விக்ரம் 60’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சியான் விக்ரமின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.