வவுனியாவில் நபர் ஒருவர் பரிதாப பலி!

வவுனியா மடுகந்த பகுதியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.


குறித்த நபர் ஆடுகளுக்கு குழை பறிப்பதற்காக மடுகந்த பகுதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறியநிலையில், தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அங்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் அன்ரன் அருள்நாதன் வயது 51 என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மடுகந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.