சசிகலாவுக்கு அதிமுகவில் இடமுண்டா?

சசிகலா அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 2017 பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா இன்னும் சில மாதங்களில் விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுக, அமமுகவில் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பாக தற்போதே விவாதங்கள் துவங்கியுள்ளன.

நாகையில் இன்று (ஜூலை 10) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் என்று கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
“அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்பதால் அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. கட்சி எடுத்த முடிவு நேற்றும், இன்றும் நாளையும் ஒன்றுதான். அதிமுகவின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் நடத்துவதுதான் எங்களின் ஒரே லட்சியம். சிறையில் இருந்து சசிகலா விடுதலையானாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை”என்று ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதிமுகவில் யாராவது சேர வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “சசிகலா, தினகரன் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர யார் வேண்டுமானாலும் தாராளமாக வந்து கட்சியில் சேர்ந்துகொள்ளலாம்” என்று பதிலளித்தார்.
எழில்
Blogger இயக்குவது.