கமல்ஹாசனின் புதுக்கணக்கு!

தமிழ் திரைப்படத்துறையில் பல்வேறு புதுமைகளைக் கொண்டுவந்த பெருமை கமலுக்கு உண்டு. குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டாடுவதிலும் அதனை முன்னெடுப்பதிலும் கமல் எப்போது முன்னணி தான்.


ஓடிடி எனப்படும் டிஜிட்டல் தளம் அறிமுகமாவதற்கு முன்பே, பல ஆண்டுகளுக்கு முன் டிடிஹெச்சில் நேரடியாக படங்கள் வெளியீடு தொடர்பாக பேசிவருபவர் கமல்ஹாசன்.

இந்நிலையில், கமல்ஹாசன் இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு புதிய திரைக்கதையை எழுதி முடித்துள்ளார். இது நேரடி ஓடிடி வெளியீட்டை மனதில் வைத்து எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், தற்போது இந்த ஊரடங்கில் ஓடிடி தளத்துக்கான தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் கமல். கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான டர்மரிக் மீடியா நிறுவனம் மூலமாக ஓடிடி தளத்துக்கான தயாரிப்பில் ஈடுபடவுள்ளார். இதற்கான புதிய திரைக்கதைகளை கமல் கேட்டும் வருகிறார். மேலும், டர்மரிக் மீடியாவுடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும் இதில் கைகோர்த்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல் தனது திரையுலக பயணத்தை தொடர மாட்டார் எனக்கூறப்பட்ட நிலையில், இந்த செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 2 பணிகளை முடித்துவிட்டு, விரைவில் ஓடிடி தளத்தில் கமலைக் காண வாய்ப்புள்ளது என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

-முகேஷ் சுப்ரமணியம்
Powered by Blogger.