மன்னார் அகழ்வில் இதுதான் சிக்கியது!!

மன்னார் பேசாலை கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் சந்தேக பொருட்கள் இருப்பதாக இன்று மாலை மன்னார் பதில் நீதவான் இ.கயாஸ் பெல்டானோ முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த அகழ்வு நடவடிக்கைகளின் போது பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த அகழ்வு பணி நீண்ட நேரம் இடம் பெற்ற போதும் எவ்வித பொருட்களும் கிடைக்கவில்லை.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக பேசாலை பகுதியில் இவ்வாறான சந்தேக பொருட்கள் இருப்பதாக கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் பல இடங்களில் அகழ்வு பணி இடம்பெற்று வருகின்றது.
எனினும் இதுவரை குறித்த பகுதிகளில் எதுவித பொருட்களும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அகழ்வுப்பணி இடம் பெற்ற குறித்த வீட்டின் நடுப்பகுதியில் கடந்த ஞாயிறு இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 2.30 மணி வரை மன்னார் பொலிஸார் தன்னிச்சையாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதி மக்கள் போலீசாருடன் முரண்பட்ட நிலையிலேயே குறித்த அகழ்வுப் பணி திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து குறித்த நபர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் நீதிமன்றில் உத்தரவுக்கு அமைவாக அகழ்வுப் பணி இடம்பெற்றது.
எனினும் எவ்வித பொருளும் இதன்போது மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.