முன்னணி நடிகை கிரிக்கெட் பயிற்சியில் - வைரலாகும் வீடியோ!!

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்பதும் கோடிக்கணக்கானோர் இந்த விளையாட்டுக்கு ரசிகர்கள் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கிரிக்கெட் பயிற்சி எடுத்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிகா மந்தனா நடித்த திரைப்படம் ’டியர் காம்ரேட்’. இந்த படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனை கேரக்டரில் நடித்திருப்பார். இந்த கேரக்டரில் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக அவர் சில நாட்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்ததை அடுத்து ராஷ்மிகா இந்த படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 5 நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இது குறித்து ராஷ்மிகா மந்தனா கூறிய போது ’எந்த ஒரு செயலையும் நாம் விருப்பப்பட்டு கடின முயற்சியுடன் செய்தால் பழகிக் கொள்ளலாம் என்றும் கிரிக்கெட் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்று கூட தனக்கு தெரியாது என்றும் பேட்டை எப்படி பிடிக்கவேண்டும் என்பது கூட தெரியாத நான் பயிற்சியின் மூலம் ஓரளவுக்கு இந்த விளையாட்டில் தேறினேன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். எனவே கண்டிப்பாக நம்புங்கள், உங்களால் முடியாதது எதுவுமே இல்லை! கடின முயற்சி மற்றும் நம்பிக்கை ஆகியவை இருந்தால் கண்டிப்பாக நாம் எந்த துறையிலும் முன்னேறலாம்’ என்று ராஷ்மிகா மந்தனா குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா இந்த பதிவு மற்றும் அவர் பதிவு செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.