22 அகதிகளின் சடலங்கள் லிபிய கடலோர பகுதியிலிருந்து கண்டெடுப்பு!

 

கடலோர நகரமான ஸ்வாராவில் இருந்து 22 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உடல்களை லிபிய ரெட் கிரசண்ட் அமைப்பு கண்டெடுத்துள்ளதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (ஐஓஎம்) கூறியுள்ளது.

கடந்த வாரம், ஸ்வாரா நகரின் கடற்கரையோரத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 45பேரின் உயிரைக் காவு வாங்கிய கப்பல் விபத்துடன் தொடர்புடையவர்களின், உடல்களாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதுகுறித்து ஜெனீவாவில் ஐ.ஓ.எம் செய்தித் தொடர்பாளர் சஃபா மெஸ்லி கூறுகையில், ‘முன்னதாக விபத்து நேர்ந்த இடத்தில் 22 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் ஆபிரிக்க ஆண்களே. எனினும், எங்களிடம் இன்னும் தேசிய இனங்கள் பற்றிய தகவல்கள் இல்லை’ என கூறினார்.

மத்தியதரைக் கடலில் படகில் இருக்கும் படகுகளின் அதிகாரிகளை எச்சரிக்கும் ஒரு ஆர்வலர் வலையமைப்பான அலார்ம்ஃபோன், ஒகஸ்ட் 17ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 20ஆம் திகதி வரை மத்திய மத்தியதரைக் கடலில் மேலும் மூன்று கப்பல் விபத்துக்கள் நடந்ததாக அறிவித்தது.

இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 497 அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் இந்த பாதையில் இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐரோப்பாவை அடைய விரும்பும் ஆபிரிக்கர்களுக்கு லிபியா ஒரு முக்கிய நுழைவாயிலாக செயற்படுகிறது. லிபியாவில் தற்போது 636,000க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் இருப்பதாக ஐஓஎம் கணித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.