மும்பையில் இடிந்து வீழ்ந்த 3 மாடிக்கட்டடம்: பலர் உயிரிழப்பு

 



மும்பையின் புறநகரில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக  இந்திய  செய்திகள் தெரிவித்துள்ளன.


மேலும் 20 முதல் 25 பேர் பிவாண்டியில் அமைந்துள்ள குறித்த கட்டிடத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந் நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் பதிலளிப்பு படையின் தலைவர் சத்ய பிரதான் தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளார்.


சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அனர்த்தத்தின்போது கட்டிடத்தில் 20 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த மாதம், மும்பைக்கு தெற்கே 165 கி.மீ (100 மைல்) தொலைவில் உள்ள ஒரு தொழில்துறை நகரமான மஹாத்தில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர்.


2017 ஆம் ஆண்டில், இந்திய குற்ற பதிவேடுகளின் பணியிட தரவு, நாடு முழுவதும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.